News August 24, 2024
பாகிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை படைத்த வங்கதேசம்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 565 ரன்கள் எடுத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் வங்கதேசம் எடுக்கும் அதிகபட்ச ரன்னாகும். முன்னதாக 555/6 ரன்கள் எடுத்ததே பாக்., அணிக்கு எதிராக அந்த அணியின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடிய முஸ்தஃபிசுர் ரஹீம் 191, சதாம் இஸ்லாம் 93, மெஹிதி ஹசன் 77 ரன்கள் எடுத்தனர்.
Similar News
News March 8, 2026
7 நாட்களில் நாடு திரும்பிய 52,000 இந்தியர்கள்

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளின் வான்வெளி போக்குவரத்து ஓரளவு திறக்கப்பட்டதன் மூலம் விமான நிறுவனங்கள் வணிக விமானங்களை இயக்குகின்றன என்றும், மார்ச் 1 முதல் 7-ம் தேதி வரை வளைகுடா நாடுகளில் இருந்து 52,000 பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
News March 8, 2026
டி20 WC பைனலில் முதல்முறையாக இந்தியர்கள்!

தற்போதைய இந்திய அணியில் உள்ள 6 வீரர்கள் முதல் முறையாக டி20 WC பைனலில் விளையாட இருக்கிறார்கள். அதன்படி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா. ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாட உள்ளனர். ODI WC, சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வருண் சக்கரவர்த்தி, இஷான் கிஷன் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பங்கேற்ற போது டி20 பைனலில் முதல்முறையாக பங்கேற்கின்றனர்.
News March 8, 2026
இந்திரா காந்தி பொன்மொழிகள்!

*எதிர் கேள்வி கேட்பதே மனித முன்னேற்றத்திற்கான அடிப்படை. *துணிச்சலின் நல்லொழுக்கம், மன்னிப்பு. *ஒருவர் பேசுவதை முழுதாக கேட்டுவிட்டு பின்னர் கேள்வி கேட்க பழகிக் கொள்ளுங்கள். *தம் உரிமைகளை கோருபவர்கள் என்றும், தம் கடைமைகளை மறக்கக்கூடாது. *விருப்பம் இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.


