News August 24, 2024

X-தளத்திலிருந்து வெளியேறும் எஸ்பிக்கள்

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், அவதூறு பேச்சுக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியதற்காக, ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தூண்டுதலில், என் குழந்தைகள், குடும்பத்தினரின் புகைப்படங்களை தரம் தாழ்ந்து சித்தரிக்கின்றனர். அதனால் X தள உரையாடல்களில் இருந்து நானும், என் மனைவியும் தற்காலிகமாக வெளியேறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News March 3, 2026

திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.

News March 3, 2026

திருச்சி: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

image

திருச்சி மக்களே, <>இங்கு க்ளிக் செய்து <<>>தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…

News March 3, 2026

திருச்சி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

திருச்சி மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!