News August 24, 2024
குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 24) நடந்தது. இந்த கூட்டத்திற்கு இந்து முன்னணி நிர்வாகிகளை அழைக்கவில்லை எனக்கூறி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது இந்து முன்னணி நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
காட்பாடி செல்ஃபி பாயின்டை திறந்து வைத்த கலெக்டர்

காட்பாடி விருதம்பட்டில் அமைக்கப்பட்டுள்ள “நம்ம காட்பாடி” செல்பி பாயிண்ட்டை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர், வேலூர் எம்பி கதிர் ஆனந்த் ஆகியோர் இன்று (மார்ச் 05) திறந்து வைத்தனர். இதில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், காட்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் வேல்முருகன், ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News March 5, 2026
வேலூர்: முதலமைச்சரிடம் புகார் அளிக்கணுமா?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க!
News March 5, 2026
விருதம்பட்டு காவல் நிலையத்தில் 4 போலீசார் இடமாற்றம்

வேலூர் விருதம்பட்டு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பரத், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், தலைமை காவலர் சுரேந்தர், முதல்நிலை காவலர் முகேஷ் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் அவர்களை திடீரென இடமாற்றம் செய்து நேற்று எஸ்பி சிவராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் பரத் தர்மபுரிக்கும், கோபிநாத், சுரேந்தர், முகேஷ் ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


