News August 24, 2024

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கனமழை இல்லை

image

தமிழகத்தில் இன்று முதல் 30ஆம் தேதி வரை நிலவும் வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. வருகிற 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Similar News

News March 27, 2026

தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

image

இன்று தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து ஷாக் கொடுத்தது. மேலும், ஈரான் மீதான தாக்குதலை கூடுதலாக 10 நாள்களுக்கு (ஏப்.6 வரை) நிறுத்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளதாலும், தங்கம் விலை தொடர்ந்து உயரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ் $71 (இந்திய மதிப்பில் ₹6,723) உயர்ந்து $4,454-க்கு வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2026

புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்து போட்டி

image

தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடும் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதிமுக உடன் கூட்டணி உடன்பாடு எட்டப்படாத நிலையில் ‘நம்மை புறக்கணித்தவர்களை, நாம் புறக்கணிப்போம்’ என்ற அவர், இம்முறை தன்னுடைய கட்சி 70 தொகுதிகள் வரை போட்டியிடும் என்றார். மேலும், புதிய தமிழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 29-ல் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 27, 2026

பாஜகவின் முதல் வேட்பாளர் அறிவிப்பு

image

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களின் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் தான் போட்டியிடுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் அறிவித்துள்ளார். கடந்த முறை நெல்லையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், இந்த முறை தொகுதியை மாற்றியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!