News August 24, 2024
திருப்பத்தூரில் இருந்து வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இன்று காலை 11 மணியளவில் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திருப்பத்தூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் செஞ்சிலுவை சங்க தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தினர்.
Similar News
News March 3, 2026
திருப்பத்தூரில் சர்க்கரை நோய்க்கு இலவச சிகிச்சை!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். உடனடி இலவச சிகிச்சை அளிக்கப்படும். SHARE பண்ணுங்க!
News March 3, 2026
திருப்பத்தூர் கலெக்டர் ஆபிசில் குவிந்த மனுக்கள்!

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மொத்தம் 768 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், 3 மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 470 கல்வி கடன் உதவி, ஒருவருக்கு இ-பட்டா. 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவசவுந்தரவல்லி வழங்கினார். மேலும் மற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
News March 3, 2026
ஜோலார்பேட்டையில் தட்டி தூக்கிய திமுக!

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி நேற்று திமுகவில் இணைந்தனர். ஜோலார்பேட்டையில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியச் செயலாளர் கவிதா தண்டபாணி தலைமை தாங்கினார். இச்சம்பவம் அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


