News August 24, 2024

மருத்துவராகும் 162 அரசு பள்ளி மாணவர்கள்

image

மதுரையில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் அரசு பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்தனர். மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த தமிழ் வழியில் படித்த 532 பேர் ‘நீட்’ நுழைவுத் தேர்வு எழுதியதில் 162 பேர் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் தகுதி பெற்றனர். மாணவ மாணவியரின் நீட் வெற்றிக்கு உதவிய ஆசிரியர்களை சிஇஓ கார்த்திகா வாழ்த்தினார்.

Similar News

News March 3, 2026

மதுரை: பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

image

மதுரை, காமராஜர் சாலையை சேர்ந்த மஞ்சுளா(45), தனியார் டிரைவிங் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவரிடம் தெற்குவாசலை சேர்ந்த கேசவன்(30) ரூ.8 லட்சம் கடன் வாங்கியிருந்தார். மஞ்சுளா பணத்தை திருப்பி கேட்டு வந்ததால் ஆத்திரமடைந்த கேசவன், வீட்டிற்கு சென்று தோசைக்கல்லால் தாக்கி கழுத்தை நெரித்து கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் தெப்பகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 3, 2026

மாநகர காவல் இரவு ரோந்து அதிகாரிகள்

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் மாரிச்சாமி தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் இலக்கியா வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2026

மதுரை : தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!