News August 24, 2024
நாமக்கல் கல்வி அலுவலர் விசாரணை

எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் நேற்று +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ் (16), ரித்திஷ்(16)) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து எருமைப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அதை அடுத்து இன்று வரகூர் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.
Similar News
News November 15, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
நாமக்கல்லில் 58-வது தேசிய நூலக வார விழா!

நாமக்கல் மாவட்ட மைய நூலகம் மற்றும் மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 58-வது தேசிய நூலக வார விழா, வரும் (16-11-2025) ஞாயிற்றுக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி தலைமை வகிக்க உள்ளார். நல்லாசிரியர் விருது பெற்ற முதுகலை தமிழாசிரியர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
News November 14, 2025
நாமக்கல்: 11,364 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ளனர்!

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நாளை நவ.15ஆம் தேதி முதல் தாள் நடைபெற உள்ளது. இதில் 1,708 நபர்களும் 16ஆம் தேதி இரண்டாவது தாள் நடைபெற உள்ளது. இதில் 9,656 நபர்கள் என மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் தேர்வில் 11,364 தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுத உள்ளனர் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.


