News August 24, 2024
நாங்கள் நம்பிக்கைகளுக்கு தடையாக இருந்ததில்லை: CM

பழனியில் 2 நாள்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை CM ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாநாடு 2 நாள்களில் முடிந்தாலும், ஒருவாரத்திற்கு அரங்கம், கண்காட்சி திறந்திருக்கும் என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும், அவற்றுக்கு அரசு தடையாக இருந்ததில்லை என்று கூறிய அவர், பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை திமுக வழங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
Similar News
News July 5, 2025
இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?
News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News July 5, 2025
புதினாவுக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா?

புதினாவை பிரியாணி உள்ளிட்ட உணவுகளில் வாசனைக்காக பயன்படுத்தும் பொருள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. தலைவலி முதல் பாதங்களில் ஏற்படும் வலி வரை சரிசெய்ய புதினா உதவும். *அஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் *நாள்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி பிரச்சினையைச் சரிசெய்யும் *பெப்பர்மின்ட் ஆயில் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்கும் * பெப்பர்மிண்ட் ஆயிலில் மசாஜ் செய்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.