News August 24, 2024

ஈரோட்டில் பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்

image

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில், பாஜக உறுப்பினர் சேர்க்கை-2024 பயிலரங்கம், ஈரோடு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம் தலைமை வகித்தார். இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி மற்றும் மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சரஸ்வதி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை பற்றிய வழிகாட்டுதல்களை வழங்கினர்.

Similar News

News January 14, 2026

பவானி அருகே விபத்து: ஒருவர் பலி

image

பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் நேற்று இரவு தனது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்த போது, சிங்கம்பேட்டை அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் பவானி GHல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவர் இறந்து விட்டதாக கூறினர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 14, 2026

தாளவாடி அருகே ஸ்தம்பித்தது

image

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இப்பகுதியில் இன்று கனரக வாகனங்களை ஏற்றிச்சென்ற லாரி குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் நடு வழியில் நின்றது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

News January 14, 2026

ஈரோடு: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

image

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகத்தை அணுகவும்.

error: Content is protected !!