News August 24, 2024
பழனி முருகன் மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர்

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் இன்றும், நாளையும் அகில உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக சற்றுமுன் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
திண்டுக்கலில் வாக்காளர் பட்டியல் திருத்த விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம் பெறுகின்றன. சமூக ஊடக அட்டைகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன் வெளியிட்டார். தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களிடம் புதுப்பிப்பு, பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம் போன்ற பணிகளில் முழு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
News November 3, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை ,வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
News November 3, 2025
திண்டுக்கலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக தளங்கள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. முன் செல்லும் வாகனத்துக்கு குறைந்தது 10 மீட்டர் இடைவெளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நினைவூட்டப்பட்டனர். பாதுகாப்பு இடைவெளி உயிரைக் காப்பதாகும் என்பதால், ஊரகப் பகுதிகள் முதல் நகரப்பகுதிகள் வரை மக்கள் விதிகளை விழிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று சமூக பயனாளர்கள் வலியுறுத்தினர்.


