News August 24, 2024

விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரணம்

image

தமிழகம் முழுவதும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் விபத்து நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அணைக்கட்டு தாலுகாவில் விபத்தில் இறந்த 40 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆர்டிஓ பங்கேற்று நிவாரண தொகையை வழங்கினார்.

Similar News

News October 16, 2025

வேலூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (அக்-15) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 102 மதுபாட்டில்களை  பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

News October 16, 2025

காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணி விவரங்கள்

image

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (அக்.15) இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை நடைபெறும் இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது. வேலூர், காட்பாடி, காட்பாடி, அனைகட்டு பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களின் பாதுகாப்புக்காக இரவு முழுவதும் சிறப்பு ரோந்துப் பணிகள் நடைபெறும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News October 15, 2025

குடியாத்தம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியர்

image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தலைமை மருத்துவமனையை ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (அக்.15) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) பியூலா ஆக்னஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுடலைமுத்து, வட்டாட்சியர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!