News August 24, 2024

இன்ஸ்டாவில் காதலியின் ஆபாச புகைப்படம் – கைது

image

தஞ்சையை சேர்ந்த 26 வயது இளம்பெண் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவரை கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், மணிவண்ணன், தனது காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் படி போலீசார் மணிவண்ணனை கைது செய்தனர்.

Similar News

News August 18, 2025

தஞ்சை: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News August 18, 2025

தஞ்சை மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள்?

image

தஞ்சை மாவட்டத்தில் முக்கிய அதிகாரிகளாக பா. பிரியங்கா பங்கஜம் – மாவட்ட ஆட்சியர், ஜியாவுல் ஹக் – காவல்துறை துணைத்தலைவர், தஞ்சாவூர் சரகம் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோர் உள்ளனர். மேலும் தெ. தியாகராஜன் – மாவட்ட வருவாய் அலுவலர், முனைவர் மு.பாலகணேஷ் – திட்ட இயக்குநர், இரா. இராஜாராம்-காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் பணியில் உள்ளனர். தெரியாதவர்களுக்கு ஷேர் செய்து நம் மாவட்ட தகவலை தெரியப்படுத்துங்கள்

News August 18, 2025

தஞ்சாவூர் இரவு ரோந்து பணி செல்லும் காவலர்களின் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.17) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் எண்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் வெளிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் காவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர எண் 100யை அழைக்கலாம்.

error: Content is protected !!