News August 24, 2024
வரும் 28ஆம் தேதி பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் ஆறு யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு வரும் 25ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது. முதல் நாள் ஒரு கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து இரு நாட்கள் இரு யாக சாலை பூஜைககள் நடைபெற உள்ளது.
Similar News
News February 22, 2026
காஞ்சிபுரம் : CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News February 22, 2026
காஞ்சிபுரம்: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை!

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில்<
News February 22, 2026
காஞ்சிபுரத்தில் காவல்துறை அதிரடி!

திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் லாரியில் இருந்து வேனுக்கு மாற்றப்பட்ட 2.5 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த கனகலிங்கம் (39) மற்றும் அவரது நண்பர் குமார் (36) ஆகியோரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கனகலிங்கம் சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.


