News August 24, 2024

கிருஷ்ணகிரியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஆட்கள் தேர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், விலங்குகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவை EMRI Green Health Services உடன் இணைந்து தமிழக அரசு தொடங்க உள்ளது. இதில் பணிபுரிய ஓட்டுநர்களுக்கு நேர்முகத் தேர்வு கிருஷ்ணகிரி பழைய அரசு மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற உள்ளது. நேர்முக தேர்வுக்கு அசல் கல்வி சான்றிதழ் மற்றும் ஓட்டுனர் உரிமம் அவசியம் கொண்டுவர வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News

News August 27, 2025

BREAKING: கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து… இருவர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே இன்று (ஆக.27) இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மணிவண்ணன்(43) என்பவரும், அவரிடம் லிப்ட் கேட்டு வந்த கர்நாடகவைச் சேர்ந்த முரளி (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 27, 2025

கிருஷ்ணகிரி: B.Sc, BCA போதும்… மத்திய அரசு வேலை ரெடி

image

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.Sc, BCA முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து செப்.14க்குள் விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 27, 2025

கிருஷ்ணகிரி மக்களே நோட் பண்ணிக்கோங்க

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 27.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது

error: Content is protected !!