News August 24, 2024
திருவாரூர் அருகே 34,000 மாணவர்களுக்கு மாத்திரை

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 102 அங்கன்வாடி, 105 பள்ளிகளில் உள்ள 19 வயது நிரம்பிய சுமார் 34,000 மாணவ, மாணவிகளுக்கு சுகாதார துறை சார்பில் நேற்று தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பூச்சி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிள்ளிவளவன் தலைமையில் சுகாதார துறையினர் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News December 24, 2025
திருவாரூர்: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 1,29,480 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 & ஜன.3, 4 ஆகிய தேதிகளில், திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள <
News December 24, 2025
திருவாரூர்-காரைக்குடி ரயில் நேர மாற்றம்

தற்போது காலை 6:25 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு செல்கின்ற திருவாரூர் – காரைக்குடி பயணிகள் ரயில் (வண்டி எண் 56827) 01.01.2026 முதல் பத்து நிமிடங்கள் முன்னதாக காலை 6:15 மணிக்கு திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதேபோல் மறு மார்க்கத்தில் காரைக்குடி – திருவாரூர் ரயில் (வண்டி எண் 56828) காரைக்குடியில் இருந்து மாலை 6:15க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 24, 2025
திருவாரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருவாரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


