News August 24, 2024
ஒரே டிக்கெட்டில் இனி சிங்கப்பூர் செல்லலாம்

திருச்சி – இலங்கை இடையே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு ஒரே பயணச்சீட்டு மூலம் செல்லும் புதிய நடைமுறையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமான சேவை வாரத்தில் 4 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.
Similar News
News December 9, 2025
திருச்சி மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

திருச்சி மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <
News December 9, 2025
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருச்சி அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். https://tiruchirappalli.nic.in என்ற தலைப்பில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லம், ஆவூர் சாலை, மாத்தூர், திருச்சி என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 22 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
திருச்சி: டூவீலர் – கார் நேருக்கு நேர் மோதி விபத்து

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முத்தரசநல்லூர் அருகே நேற்று (டிச.8) கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தும் வராததால், விபத்து ஏற்படுத்திய அதே காரில் அவர்களை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


