News August 23, 2024

HAL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பிங்க..

image

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தில் (HAL) காலியாக உள்ள 166 இடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி நடைபெறுகிறது. தேஜஸ் போர் விமானத்தை கட்டமைக்கும் HAL பிரிவில் டெக்னீசியன் வேலைக்கு இந்த பதிவு தொடங்கி நடக்கிறது. கல்வித் தகுதி ITI என்ஜீனியரிங், ITI டெக்னிசியன் ஆகும். விருப்பமுள்ளோர் hal-india.co.in தளத்தில் ₹200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 28ஆம் தேதி கடைசி நாளாகும்.

Similar News

News December 9, 2025

கோவா தீ விபத்து: இண்டர்போல் உதவியை நாடும் போலீஸ்

image

கோவா <<18500834>>இரவு விடுதி தீ விபத்தில்<<>> 25 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த சில மணி நேரத்தில் விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்து தப்பியோடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தப்பியோடிய கௌரவ் மற்றும் சவுரப்பை பிடிக்க, இண்டர்போல் உதவியை போலீசார் நாடியுள்ளனர். இதற்கிடையே, இவர்களுக்கு சொந்தமான இன்னொரு விடுதி ஒன்று, அரசு நிலத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

News December 9, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 544 ▶குறள்: குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. ▶பொருள்: குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

News December 9, 2025

₹2.43 கோடியை வேண்டாம் என்று சொன்ன வீராங்கனை

image

ஓய்வு பெற்ற ஃபிரெஞ்சு டென்னிஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (32), தனது யூடியூப் சேனலில் டென்னிஸ் வீரர்களின் பேட்டிகளை வெளியிட்டு வருகிறார். அவரது சேனலுக்கு, சூதாட்ட நிறுவனம் ஒன்று ₹2.43 கோடி ஸ்பான்சர்ஷிப் செய்ய முன்வந்துள்ளது. ஆனால், அதை மறுத்து, பணத்தை விட தனது நோக்கம் மதிப்புமிக்கது என தெரிவித்துள்ளார். மேலும், டென்னிஸ் சார்ந்த ஆரோக்கியமான வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!