News August 23, 2024
BHISHM கியூப்ஸை உக்ரைனுக்கு வழங்கிய மோடி

காயமடைந்தவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க உதவும் BHISHM கியூப்ஸை உக்ரைனுக்கு PM மோடி வழங்கினார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மருத்துவ வசதிகளை விரைவாக பெற, மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொண்ட இந்த கியூப் உதவிகரமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதை பயன்படுத்தும் வகையில், உக்ரைன் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க இந்தியாவில் இருந்து நிபுணர்கள் குழு அனுப்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் கிருஷ்ணசாமி

கூட்டணி முடிவு குறித்து இதுவரை அறிவிக்காத புதிய தமிழகம் கட்சி தவெக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். வெறும் MLA ஆக வெற்றிபெறுவது மட்டும் தங்கள் நோக்கம் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.
News January 27, 2026
சென்சார் சான்றிதழ்.. முட்டுக்கட்டை போடுமா CBFC?

இன்று காலை 10:30 மணிக்கு ‘ஜன நாயகன்’ பட வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கவுள்ளது. படத்துக்கு U/A சான்றிதழ் அளித்து ரிலீஸ் செய்ய உத்தரவிட்டாலும், மீண்டும் CBFC முட்டுக்கட்டை போடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐகோர்ட்டில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால், சுப்ரீம் கோர்ட்டில் CBFC மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
News January 27, 2026
விசில் சத்தம் கொஞ்ச நேரம்தான் வரும்: கடம்பூர் ராஜூ

அதிமுக ஊழல் கட்சி என தவெக கூட்டத்தில் விஜய் பேசிய பின், அதிமுக நிர்வாகிகள் கடுமையான பதிலடியை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் விசில் சத்தம் எவ்வளவு வேகமாக வருகிறதோ, அதே வேகத்தில் போய்விடும் எனவும், அதுபற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம் என்றும் EX அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். ஏற்கெனவே <<18963533>>செல்லூர் ராஜு<<>>, ராஜன் செல்லப்பா ஆகியோர் விஜய்யை சாடியிருந்தனர்.


