News August 23, 2024
65 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக ஆண்டிப்பட்டி வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஆக.1 தேதி 56.20 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 65 அடியாக உயர்ந்துள்ளது. 66 அடியில் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம். இதற்காக நீர்வரத்து 24 மணி நேரமும் நீர்வளத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News July 5, 2025
தேனியில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தேனி மக்களே தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு<
News July 5, 2025
தகராறில் ஆணை தாக்கிய இரு பெண்கள் மீது வழக்கு

கண்டமனூரை சேர்ந்த பாண்டியன் 48, தனது வீட்டில் நகை காணாமல் போனது தொடர்பாக வீட்டிற்கு வெளியில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அவரது அண்ணன் மனைவி ஈஸ்வரி,’ நான் தானே பக்கத்தில் குடியிருக்கிறேன் என்னைத்தான் சொல்கிறாயா,’ என்று கேட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஈஸ்வரியின் மகள் முருகேஸ்வரி அரிவாள் பின்புறமாக திருப்பி தலையில் தாக்கியதில் பாண்டியன் காயமடைந்தார். போலீசார் விசாரணை
News July 4, 2025
பாவங்களை நீக்கி பேரின்பம் அருளும் அற்புத திருத்தலம்

தேனி மாவட்ட மக்களே நம்ம சின்னமனூரில் பூவாநந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மூலவராக பூவாநந்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்கு வருகை தந்து பூவாநந்தீஸ்வரரை மனதார பிரார்த்தனை செய்தால் பாவங்களை நீக்கி பேரின்பத்தை சிவபெருமான் அருள்பாலிக்கிறார். மேலும் திருமணத்தடை மற்றும் குழந்தை வரத்தையும் அருளும் திருத்தலமாக விளங்குவதாக சொல்லபடுகிறது. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHAREபண்ணுஙக!