News August 23, 2024

தஞ்சாவூரில் டிஎஸ்பிக்கள் மாற்றம்

image

தமிழகத்தில் உள்ள 20 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தனுசியா கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி அருணாச்சலம் குமரிக்கும், செங்கல்பட்டில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக பணிபுரிந்த அருண்மொழி அரசு திருவையாருக்கும் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 9, 2025

தஞ்சாவூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

தஞ்சாவூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 9, 2025

Gpay மூலம் மோசடி செய்த இளைஞர் கைது

image

கபிஸ்தலத்தில் பெட்டிக்கடை நடத்தும் முகமது பைசல் என்ற முதியவரிடம் Gpay மூலம் பணம் அனுப்பினால் திருப்பி தந்துவிடுவதாக கூறி ரூ.7,300 மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய கபிஸ்தலம் காவல்துறையினர், இனாம் கிளியூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(26), என்ற இளைஞரை கைது செய்தனர்.

News December 9, 2025

தஞ்சாவூர்: இருசக்கர வாகன விபத்து – 2 சிறுவர்கள் பலி

image

தஞ்சாவூர் மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த திரிஷேக்(17) மற்றும் உதாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்(17) ஆகிய இரண்டு சிறுவர்களும்
இருசக்கர வாகனத்தில், திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து ஊருக்கு திரும்பி வருந்துள்ளனர். அப்போது திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதாகோவில் சாலை ஓரமாக இருந்த சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பலியாகினர்.

error: Content is protected !!