News August 23, 2024
ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

விருதுநகரில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சுந்தரராஜன் என்பவர் அல்லம்பட்டி பகுதியைச் சார்ந்த மைதின் பாட்ஷா என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்தார். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொலை குற்றவாளி சுந்தரராஜன் என்பவருக்கு விருதுநகர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News December 7, 2025
விருதுநகர்: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
விருதுநகர்: மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய காதல் கணவர்

சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் முத்து விக்னேஸ்வரன் (22). பட்டாசு தொழிலாளியான இவர் 4 மாதத்திற்கு முன் பாக்கியலட்சுமியை காதல் திருமணம் செய்துள்ளார். முத்து விக்னேஸ்வரன் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பாக்கியலட்சுமி பணம் தர மறுத்ததால் அவரை மிரட்டுவதற்காக அவர் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் முத்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.
News December 7, 2025
விருதுநகர்: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <


