News August 23, 2024

மைசூரு – காரைக்குடி ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

image

மைசூரு – காரைக்குடி சிறப்பு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ததற்கு ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காரைக்குடி வரை இயக்கப்பட்ட இந்த ரயிலானது தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்.4 மற்றும் 7 ஆகிய நாட்கள் இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து இரவு 9:20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு மறுநாள் காலை 11:05க்கும் செங்கோட்டைக்கு மாலை 4:50க்கு சென்றடையும்.

Similar News

News December 9, 2025

மடப்புரம் இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல்

image

திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (25), அருகில் உள்ள முடி திருத்தகத்தில் அமா்ந்திருந்தபோது அங்கு வந்த கும்பல் ஒன்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடர்பாக ஆதிராஜேஸ்வரன், சஞ்சய் உள்ளிட்ட 12 பேரை கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2025

சிவகங்கை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<> electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE IT.

News December 9, 2025

மானாமதுரை: டூவீலர் விபத்தில் சிறுவன் பலி

image

மானாமதுரை அருகே மூங்கில் ஊரணியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் அய்யனார் (17), நேற்று இருசக்கர வாகனத்தில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் வந்த போது சர்வீஸ் ரோட்டிலிருந்து மேம்பாலத்திற்கு ஏற போடப்பட்டிருந்த இரும்பிலான படிக்கட்டில் எதிர்பாராத விதமாக மோதியதில் தலை மற்றும் முகத்தில் காயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!