News August 23, 2024
திண்டுக்கல்லில் ஊரக அலுவலர்கள் போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 649 அலுவலர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. மாவட்டத்தில் 73 சதவீத அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
Similar News
News December 13, 2025
திண்டுக்கல்: வாடகை வீட்டில் இருக்கிறீர்களா??

திண்டுக்கல் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News December 13, 2025
திண்டுக்கல்: மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

திண்டுக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு கிளிக் செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
திண்டுக்கல்: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572 ?

திண்டுக்கல் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


