News August 23, 2024
செம்பனார்கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்
செம்பனார்கோவில் பகுதியில் மருவார்குழலி உடனாய ஸ்வரணபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், திருக்கல்யாணம் உற்சவம் நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்வில் சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News November 20, 2024
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.20) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 20, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டம் வருகின்ற நவம்பர் 23-ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இதில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
வங்கக்கடலில் வரும் நவ.22-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் நவ.21-ஆம் தேதி (வியாழன்) நள்ளிரவு முதல் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் வரும் 21-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.