News August 23, 2024

தேசிய குடற்புழு நீக்க தினம் இன்று அனுசரிப்பு

image

தேசிய குடற்புழு நீக்க தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வருடம் இன்று முதல் 1 வயது முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதிலுள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்தார்.

Similar News

News December 8, 2025

குமரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை பண்ணுங்க!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

News December 8, 2025

குமரி: லாரி மோதி இளைஞர் பலி!

image

மணவாளக்குறிச்சி நடுவூர்கரை பகுதி லாரி டிரைவர் சதீஷ்குமார்(40). இவர் நேற்று (டிச.7) மாலை லாரியில் பொருட்களுடன் குளச்சலில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும்போது தெக்குறிச்சி சேதுபதி (24) பைக்கில் ஆலன்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். திடீரென பைக் மீது லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேதுபதி சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

News December 8, 2025

குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

image

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!