News August 23, 2024

செய்யாற்றில் இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

image

செய்யாறு அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் 2005ஆம் ஆண்டு அரசு பேருந்தில் சென்ற போது பேருந்து விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி லதா இழப்பீடு கோரி தொடர்ந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த இழப்பீட்டுத் தொகை வழங்காதால் பேருந்து ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று பேருந்தை ஜப்தி செய்தனர்.

Similar News

News December 9, 2025

தி.மலை: கஞ்சா வைத்திருந்த 3 போலி சாமியார்கள் கைது

image

செய்யாறு வடதண்டலம் பஸ் நிறுத்தம் அருகே ருத்ராட்சம் அணிந்துகொண்டு 3 பேர் சாமியார் வேடத்தில் நின்றிருந்தனர். அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதில் அளித்த நிலையில் இவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் 85 கிராம் கஞ்சா, 5 லிட்டர் தென்னங்கள் ஆகியவை இருந்துள்ளது. 3 போலி சாமியார்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

News December 9, 2025

தி.மலை: பெண் போலீசை அறைந்த ஆந்திர மக்கள்!

image

போளூர் ஸ்டேஷன் பெண் போலீஸ் மேகனா, நேற்று முன்தினம் தி.மலை கோயிலில் பணியில் இருந்தார். வரிசையில் நின்ற பக்தர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அவரை தாக்கினர். இதனால் மேகனா புகாரின்படி, ஆந்திர மாநில பக்தர்களான சரிதா, அர்சிதா, வீரேஷ், சைனீத், மாணிக்கராவ் ஆகியோர் மீது தி.மலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 9, 2025

தி.மலைக்கு வந்த அன்புமணி ராமதாஸ்

image

திருவண்ணாமலையில் மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி & அன்புமணி ராமதாஸ் சகோதரி கவிதா கணேஷ் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!