News August 22, 2024
இரவு என்ன உணவுகளை சாப்பிடலாம்?

இரவில் உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கும் நேரம். அப்போது நினைத்ததை எல்லாம் சாப்பிட்டால், அது அஜீரண பிரச்னையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சோலா பூரி, பரோட்டா, பிரியாணி, அசைவ உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், மைதா உணவுகள் சாப்பிடக் கூடாது. இட்லி, இடியாப்பம், ஓட்ஸ் கஞ்சி, தோசை, ஆப்பம், காய்கறி சாலட், பழங்கள், பழச்சாறுகள் சாப்பிடலாம் என பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News December 7, 2025
புதுசா இருக்குண்ணே.. விரைவில் பராசக்தி கண்காட்சி?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஆடியோ லாஞ்ச், ஜன., முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாம். இந்நிலையில், இப்படத்திற்காக உருவாக்கப்பட்ட 1960 காலகட்ட பொருட்களின் மாதிரிகளை கண்காட்சியாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘தி வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ என்ற பெயரில், டிச.16 முதல் ஒரு வாரத்துக்கு கண்காட்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
News December 7, 2025
நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை(டிச.8) காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனிடையே, டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கும் நாளை விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த விவரங்களை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
News December 7, 2025
₹610 கோடியை பயணிகளிடம் திருப்பி கொடுத்த இண்டிகோ

விமான பயணிகளுக்கு பெரும் இடையூறாக மாறிய இண்டிகோ சேவை, படிப்படியாக<<18496873>>இயல்பு நிலைக்கு<<>> திரும்பி வருகிறது. இதனிடையே ரத்து செய்யப்பட்ட பயணங்களுக்கான கட்டணத்தையும் அந்நிறுவனம் பயணிகளுக்கு வழங்கியுள்ளது. இதுவரை ₹610 கோடியை அந்நிறுவனம் திருப்பி செலுத்தியுள்ளது. மேலும் மீதமுள்ளவர்களுக்கு இன்று இரவுக்குள் பணம் திருப்பி செலுத்தப்படும் எனவும் இண்டிகோ உறுதி அளித்துள்ளது.


