News August 22, 2024
காவிரி பிரச்னையில் விரைவில் ஒருமித்த கருத்து: தேவகவுடா

காவிரி பிரச்னை குறித்து இரு மாநிலங்களுக்கும் இடையே விரைவில் ஒருமித்த கருத்து ஏற்படும் என முன்னாள் PM தேவகவுடா கூறியுள்ளார். கர்நாடகாவில் 9 மாவட்ட மக்கள் தண்ணீருக்கு அவதிப்படுவதாகவும், பெங்களூருவில் 1.40 கோடி மக்கள் தண்ணீரின்றி சிரமப்படுவதாகவும் கூறினார். மேலும், தமிழ்நாட்டை ஆளும் கட்சிகளுக்கு இந்த பிரச்னை குறித்து தெரியும் என்றும், விரைவில் இதற்கு தீர்வு ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News December 27, 2025
அமெரிக்காவின் 20 நிறுவனங்களுக்கு சீனா தடை

தைவானுக்கு ஆயுதங்கள் விற்க ஒப்பந்தம் போட்டதால், USA-வின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. அண்டை நாடான தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் USA, தைவானின் பக்கம் நிற்பதால், USA – சீனா இடையே பிரச்னை நிலவுகிறது. இந்நிலையில், சீனாவின் எதிர்ப்பை மீறி ₹99,822 கோடியில் தைவானுக்கு ஆயுதங்கள் விற்க டிரம்ப், பச்சைக்கொடி காட்டியது பஞ்சாயத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது.
News December 27, 2025
3 குழந்தைகளை பெறுவது சிறந்தது: சந்திரபாபு நாயுடு

உலகளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு ஒரு பெரிய தொழிலாளர் சக்தி வேண்டும் என ஆந்திர CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் முக்கியம் என்று கூறிய அவர், RSS தலைவர் மோகன் பகவத் கூறுவதுபோல ஒவ்வொரு தம்பதியும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால் 2047-க்கு பிறகும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறினார்.
News December 27, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் இன்று ₹4,906 உயர்ந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று(டிச.27) ஒரே நாளில் இந்திய மதிப்பில் ₹4,906 உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்திய சந்தையில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம், தற்போதைய நிலவரப்படி சவரன் ₹1,03,120-க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில், சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) தங்கம் $54.63(₹4,906) உயர்ந்து $4,534-க்கு விற்பனையாகிறது. கடந்த 30 நாள்களில் மட்டும் $323(₹28,821) உயர்ந்துள்ளது.


