News August 22, 2024
அடுத்த 2 மாதங்களுக்குள் பட்டமளிப்பு விழா: ஆளுநர்

அடுத்த 2 மாதங்களுக்குள் 10 பல்கலை.களில் பட்டமளிப்பு விழா நடத்த முன்மொழிந்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. பட்டமளிப்பு விழா தாமதம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆளுநர், 2023 ஏப். முதல் 2024 ஜூலை வரை 20 மாநிலப் பல்கலை.களில் 18 பல்கலை.களில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். முன்னதாக, பட்டமளிப்பு விழா தாமதமாவதால் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக தகவல் வெளியானது.
Similar News
News January 28, 2026
திமுகவிடம் விசிக வைத்த புது டிமாண்ட்

தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை தீவிரமாய் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் திமுகவிடம், 2 இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்குமாறு விசிக கேட்பதாக பேசப்பட்டது. இதற்கு திமுக தலைமை ஒப்புக்கொள்ளவில்லையாம். எனவே, 2 இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கவில்லை எனில் 1 ராஜ்யசபா சீட் கொடுக்குமாறு புதிய டிமாண்ட் ஒன்றை விசிக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
News January 28, 2026
பிப்.1-ல் டாஸ்மாக் விடுமுறை.. அரசு முக்கிய அறிவிப்பு

வள்ளலார் நினைவு நாளையொட்டி பிப்.1-ம் தேதி (வரும் ஞாயிறு) மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளனர். அதில், அரசின் உத்தரவை மீறி யாரேனும் கடையை திறந்தாலும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News January 28, 2026
வறுமையில் வாடும் பத்மஸ்ரீ வென்றவரின் குடும்பம்

சமீபத்தில் மறைந்த ஓவியர் கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணனின் குடும்பத்தினர், வாழ்வாதாரம் இன்றி குடிசையில் வசித்து வருகின்றனர். கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனிக்கும் மனைவி சுசீலா, தனது 4 பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்படுகிறார். எனவே, கிருஷ்ணனின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.


