News August 22, 2024

கோவை : விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாதத்திற்கான உற்பத்தி குழு கூட்டம் வருகிற 30ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது. இதனைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தின் 2வது தள கூட்ட அரங்கில் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (08.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 8, 2025

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் பூஞ்சோலை ஜீவா நகரை சேர்ந்தவர் முருகன்(57). இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 5 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, கோவை ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். இதுகுறித்து சிறை வார்டன் சரவணகுமார் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 8, 2025

கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

image

கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த ஏர் அரேபியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடமைகளுடன் வந்த பயணி ஒருவர் கண்ணாடியை உடைத்து, தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அவ்வாறு தப்பிச்செல்ல முயன்ற வரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது உடைமைகளை CISF உதவியுடன் சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!