News August 22, 2024
புதுக்கோட்டையில் உடல் ஊனமுற்றோருக்கு உதவிய எம்பி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, முன்னிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை இன்று வழங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News November 6, 2025
புதுகை: கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(17). வேளாண்கல்லூரி முதலாமாண்டு மாணவரான இவர் சரியாக கல்லூரிக்கு செல்லாததால் பெற்றோர் அவரை கண்டித்ததோடு கைப்பேசியையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 6, 2025
புதுகை: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
புதுகை: கோவில் பூசாரி மின்சாரம் தாக்கி பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகே உள்ள சிறு வலத்தூர்-கருப்பன் கோவில் பூசாரி தங்கவேல் தேவர் (55) கோவில் மைக் போடும்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் உள்ள கிராமத்து பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் இது குறித்து ஜெகதாபட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


