News August 22, 2024
தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தலைமை செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News September 18, 2025
நாட்டிலேயே சென்னையில்தான் முதல் முறை

சென்னையில் இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ திட்டம் உருவாகிறது. இது சென்னையின் பசுமை வழியாக உள்ள ஆற்காடு சாலையில் 5 கி.மீ நீளத்தில் அமைக்கப்படுகிறது. கீழ் அடுக்கில் Corridor–4, மேலடுக்கு Corridor–5 இயங்கும். 2 பாதைகளும் ஒரே தூண்களில் அமைக்கப்படுவது புதிய முயற்சி. அலுவார்திருநகர், வளசரவாக்கம், கரம்பாக்கம், ஆளப்பாக்கம் ஆகிய நிலையங்களில் இரு அடுக்குகளுக்கும் தனித்தனி மேடைகள் அமைக்கப்படுகிறது.
News September 18, 2025
காவல் ஆணையரகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், காவல் ஆணையரகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் துணை ஆணையாளர் G. சுப்புலட்சுமி தலைமையேற்றார். நிகழ்வில் V. V. கீதாஞ்சலி (மத்திய குற்றப்பிரிவு-II), உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
News September 18, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.