News August 22, 2024

தஞ்சை ஆயுதப்படை பெண் காவலர் சாலை விபத்தில் பலி

image

பேராவூரணி அடுத்த ரெட்டவயல் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் இன்று அதிகாலை வீடு திரும்பிய தஞ்சை ஆயுதப்படை பெண் காவலர் சுபப்ரியா மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Similar News

News December 9, 2025

தஞ்சாவூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை பெற வருகிற 31ம் தேதி வரை பூர்த்தி செய்த விண்ணங்களை அளிக்கலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

News December 9, 2025

தஞ்சாவூரில் 30 பேர் கைது

image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கும் வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாபநாசத்தில் இருந்து சென்னைக்கு பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் வேனில் புறப்பட தயாராக இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

News December 9, 2025

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். SHARE IT!

error: Content is protected !!