News August 22, 2024
நீலகிரி: மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

கீழ் கோத்திரி பகுதியில் அபாயகரமான மரங்களை வெட்டும் பணியில் நேற்று 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், கடசோலை பகுதியை சேர்ந்த அழகு சுந்தரம் (35) என்பவரும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மரம் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சோலூர் மட்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
நீலகிரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News August 14, 2025
நீலகிரி: இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

நீலகிரி, உதகை அருகே குருத்துக்குளி கிராமத்தில் நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. செஞ்சிலுவை சங்க மருத்துவர் ஜெய்னாஃ பத்திலா தங்கள் குழுவினருடன் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை வழங்கினார். செஞ்சிலுவை சங்க தலைவர் கே. கோபால், செயலாளர் மோரிஸ் சாந்தா குருஸ், முன்னாள் தலைவர் கே.ஆர்.மணி உள்பட பலர் பங்கேற்றனர்.
News August 14, 2025
தையல் பயிற்சி நிலையம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், நகர வாழ்வாதார மையத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தையல் பயிற்சி நிலையம் உள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று தையல் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.