News August 22, 2024

பெண்கள் குற்ற வழக்குகளை சந்திக்கும் 151 M.P., MLAக்கள்

image

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை 151 M.P., MLAக்கள் எதிர்கொள்வது தெரிய வந்துள்ளது. 2019-2024ம் ஆண்டு வரை தேர்தல்களில் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டிலேயே அதிகபட்சமாக மேற்குவங்க மாநிலத்தில் 25 M.P., MLAக்கள் பெண்களுக்கு எதிரான வழக்குகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளையும் அழைத்த பாமக

image

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வரும் 17-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் அன்புமணி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அதில் சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்களும் போராட்டத்தில் பங்கேற்று சமூகநீதியை பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளர்.

News December 8, 2025

WC வெற்றிக்கு அடித்தளமிட்ட பிரதிகாவுக்கு ₹2 கோடி பரிசு

image

ODI உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியில் 308 ரன்கள் குவித்த பிரதிகா ராவல், காயம் காரணமாக அரையிறுதி & ஃபைனலில் விளையாடவில்லை. இந்நிலையில், WC-ல் அவர் அளித்த பங்கை கெளரவிக்கும் விதமாக, டெல்லி CM ரேகா குப்தா, பிரதிகாவுக்கு ₹1.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். அத்துடன், டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பும் (DDCA), பிரதிகாவுக்கு ₹50 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

News December 8, 2025

தெலுங்கு நடிகருடன் மீனாட்சி சௌத்ரி காதலா?

image

GOAT-ல் விஜய்யுடன் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் மீனாட்சி சௌத்ரி. இவர் நாகார்ஜுனாவின் உறவினரான நடிகர் சுஷாந்தை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என மீனாட்சி விளக்கம் அளித்துள்ளார். மேலும், தெலுங்கில் நடிக்க தொடங்கியதில் இருந்து இப்படித்தான் மாதம் ஒரு நடிகருடன் தன்னை தொடர்புபடுத்தி செய்தி வருவதாகவும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!