News August 22, 2024
சேத்துப்பட்டு பகுதியில் குட்கா பொருட்கள் வியாபாரி கைது

சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மறைத்து வைத்திருந்து சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பெட்டி கடைகளுக்கு விற்பனை செய்து வந்த தினேஷ்குமார் என்ற நபரை நேற்று சேத்துப்பட்டு போலீசார் கைது செய்து அவனிடமிருந்து ஒரு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து தினேஷை சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 24, 2025
தி.மலை வருவாய்த்துறை சங்கங்களின் கோரிக்கை மாநாடு

திருவண்ணாமலையில் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை மாநாடு (ஆக. 23) நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊழியர்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி பளுவை குறைத்தல், தனி ஊதியம் வழங்குதல், வெளிமுகமை, தொகுப்பூதிய நியமனத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
News August 24, 2025
தி.மலை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

தி.மலை மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
தி.மலை: பாலத்தில் மதுகுடித்தவர் கீழே விழுந்து சாவு

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரகு நாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50), கட்டிட மேஸ்திரி. இவர், அந்த பகுதியில் உள்ள சிறு பாலத்தின் மீது அமர்ந்து மதுகுடித்த போது, தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து வந்த ஆரணி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.