News August 21, 2024
தமிழகத்தின் 4 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு மையம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று நோய் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை” என தெரிவித்தார்.
Similar News
News September 18, 2025
சென்னை மக்களே செப்.30 வரை கெடு…!

சென்னை நகராட்சி அதிகாரிகள் அனைத்து சொத்து உரிமையாளர்களுக்கும் செப்டம்பர் 30-க்குள் சொத்து வரியை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். 1% தனி வட்டியை தவிர்க்க, வரியை உரிய நேரத்தில் செலுத்துவது அவசியம். கட்டணம் செலுத்த, QR கோடு ஸ்கேன் செய்வதோடு 9445061913 வாட்ஸ்அப் சேவையும் பயன்படுத்தலாம். இது எளிதாகவும் விரைவாகவும் பணத்தை செலுத்த உதவுகிறது. SHARE NOW!
News September 18, 2025
சென்னை: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? செம்ம ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
சென்னையில் இன்று மழை வெளுக்கும்

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.