News August 21, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் நாளை கண்காணிப்பு குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டு துறை ரீதியாக மாவட்ட வளர்ச்சி குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்க உள்ளனர்.
Similar News
News November 6, 2025
புதுகை: குளத்தில் மூழ்கி பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அமரேசன் என்பவர் மகன் அஜித் குமார் இவர் இன்று கீழப்பட்டி அருகில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து ந்து சென்ற மழையூர் காவல்துறையினர் அஜித் குமாரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 6, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.5) இரவு 10 மணி முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 5, 2025
புதுகையில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு: Apply பண்ணுங்க!

புதுகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


