News August 21, 2024
கேரளா வயநாட்டிற்கு நிவாரண நிதி

சின்னசேலத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் இளையபெருமாள் அவர்கள் கேரளா வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார். இதில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: அரசு பள்ளியில் துணிகரம்.. HM அதிர்ச்சி!

கள்ளக்குறிச்சி: ஆவிபுதுார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. வழக்கம்போல் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தி (51), காலையில் சென்று பள்ளியை திறந்த போது அதிர்ச்சி அடைந்தார். அவரது அறை பூட்டு உடைக்கப்பட்டு, கேமரா, ப்ரொஜெக்டர் மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து திருக்கோயிலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கிராமம்!

ஏ.புத்துார் ஏரியில் முதியவர் இறந்து கிடந்தார். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், ஏரி கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைபட்ட கரையை சீரமைத்தனர். தொடர்ந்து தி.மு.க., ஊராட்சி தலைவர் நந்தகுமார் வாக்குவாதம் செய்தார். இருதரப்பினரும் அளித்த புகாரில், நந்தகுமார் மீது வழக்கு பதியப்பட்டது. இதனால் நந்தகுமார், 50 பேருடன் வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்.
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: விசிக மண்டல பொறுப்பாளர் நியமனம்!

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றம் & ரிஷிவந்தியம் சட்டமன்றம் ஆகிய இரண்டு தொகுதிக்கு மண்டல துணைச் செயலாளராக பொன்னிவளவன் என்பவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நியமித்துள்ளார். இவர் இதற்கு முன் ஒருங்கிணைந்த கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மண்டல செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


