News August 21, 2024

நாளை முதல் 9 நாள்கள் கலைத் திருவிழா

image

தமிழக அரசுப் பள்ளிகளில் நாளை முதல் ஆக.30 வரை கலைத் திருவிழா நடைபெறுகிறது. இதில் நடனம், ஓவியம், பரதம் என பல வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளிகள் அளவில் நடத்தப்படும் இந்த விழாவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் செப்.3இல் வெளியாகும். அதில் தேர்ச்சியானவர்கள் வட்டாரம், மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். மாணவர்களின் கலைத் திறனை ஊக்குவிக்க ஆண்டுதோறும் இந்த விழா நடத்தப்படுகிறது.

Similar News

News August 16, 2025

அரியலூர்: குடும்ப வன்முறையா? உடனே CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, அரியலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9842074680) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News August 16, 2025

ஆஸி., கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்

image

ஆஸி., அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும், முதல் முழுநேர பயிற்சியாளருமான பாப் சிம்ப்சன் (89) காலமானார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கேப்டனாக பணியாற்றிய அவர், ஆஸி.,யின் தலைசிறந்த ஓபனர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். சிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களில் ஒருவராக இருந்த அவர், முதல் தர கிரிக்கெட்டில் 21,029 ரன்கள் குவித்ததுடன் தனது லெக் ஸ்பின் மூலம் 349 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

News August 16, 2025

ராமதாஸ் வழிகாட்டி மட்டுமே: கே.பாலு

image

பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு உரிமை இல்லை என ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால், கட்சியின் 34 விதிகளிலும் அப்படியான எதுவும் இல்லை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.பாலு தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சியின் நிறுவனர் வழிகாட்டி மட்டுமே, அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் பாலு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். இதனிடையே, ராமதாஸின் மனைவி சரஸ்வதி பிறந்தநாளில் தந்தை-மகன் சந்தித்துள்ளனர்.

error: Content is protected !!