News August 21, 2024

மதுரைக்கு மாவட்ட கல்வி அலுவலர் நியமனம்

image

மதுரை மேலூரில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காலிப்பணியிடமாக இருந்து வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 57 கல்வி மாவட்ட அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை மாவட்டம் மேலூர் கல்வி அலுவலராக விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்த பி.இந்திரா இடமாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மாவட்ட கல்வி அலுவலராக (தனியார் பள்ளிகள்) சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News March 22, 2026

ஆசிரியர்கள் வசிக்கும் தொகுதியில் தேர்தல் பணி வழங்க எதிர்பார்ப்பு

image

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பிய மனு: சட்டப்பேரவை தேர்தலில் வாக்குச்சாவடியில் ஆசிரியர்கள் பணியாற்ற அந்த தொகுதி வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும், அவர்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதி உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

News March 22, 2026

மதுரை: கொடியேற்றத்துடன் நாளை திருவிழா துவக்கம்!

image

அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனிப் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவின் உச்ச நிகழ்வாக பிரம்மாண்ட தேரோட்டம் ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும்.

News March 22, 2026

மதுரை: நெருங்கும் தேர்தல்; உடனே செக் பண்ணுங்க!

image

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தகுதி வாய்ந்த அனைத்துக் குடிமக்களும் <>electoralsearch.eci <<>>என்ற அதிகாரப்பூர்வ இணையத்தை பார்வையிட்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் பெயர்களை சேர்ப்பதற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைன் வரும் 26-ம் தேதிக்குள் சமர்பிக்கலாம்.

error: Content is protected !!