News August 21, 2024
சிதம்பரத்தில் மீனவர்களுக்கான கூடுதல் வசதி

கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட முடசலோடை மீனவர் கிராமத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மீன் இறக்குவதற்கு கூடுதல் வசதிகள் அமைக்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியை மூலமாக இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா மற்றும் துணைத் தலைவர் வழக்கறிஞர் ரவீந்திரன் கலந்து கொண்டனர்.
Similar News
News March 13, 2026
தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணியினை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் கடலூரில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படையினர் நிலையான கண்காணிப்பு படையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என எஸ்.பி அறிவுரை வழங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News March 13, 2026
கடலூர்: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: அதிகபட்சம் 45 வயது
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, MCA
6. கடைசி தேதி: 23.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 13, 2026
கடலூர்: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்படவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…


