News August 21, 2024

12 மாவட்டங்களில் கனமழை

image

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல், மத்தியமேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Similar News

News March 26, 2026

திண்டுக்கல்: இனி Whatsapp-ல் பிறப்பு, இறப்பு சான்றிதழ்!

image

திண்டுக்கல் மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News March 26, 2026

சென்னையில் 3 பெண்களை களமிறக்கும் அதிமுக?

image

சென்னையில் அதிமுக சார்பில் 3 பெண் வேட்பாளர்களை களமிறக்க EPS திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.வளர்மதி, அண்ணா நகரில் கோகுல இந்திரா, திருவிக நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் கிருஷ்ண மூர்த்தி என்பவர் அதிமுக வேட்பாளராக களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

EPS-ன் Makeup முகத்துக்கு பின்னால் அமித்ஷா: சிவசங்கர்

image

திமுகவை விமர்சிக்கும் தகுதி EPS-க்கு இல்லை என SS சிவசங்கர் கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக இருப்பதாக <<19478396>>EPS<<>> பேசியதை குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணி கட்சிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது; அதனால்தான் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது என தெரிவித்தார். மேலும், EPS மேக் அப் போட்டு அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதற்கு பின்னால் இருப்பது அமித்ஷா என்றும் விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!