News August 21, 2024
சூரியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்

‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த கமல்ஹாசன், நடிகர் சூரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அத்துடன், அப்படத்தின் இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை வாழ்த்தி, மடலொன்றையும் வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற அப்படத்தைக் காண, தமிழ் சினிமா ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
Similar News
News March 19, 2026
பெரம்பலூர்: புதிய வாக்காளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

தமிழகத்தில் வருகிற ஏப்.23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் வருகிற மார்ச் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <
News March 19, 2026
பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை.. மாணவர்கள் HAPPY

தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.24 வரை முழு ஆண்டு தேர்வுகள் நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஏப்.23-ல் தேர்தல் நடைபெற இருப்பதால், முன்கூட்டியே (ஏப்.17-க்குள்) முழு ஆண்டுத் தேர்வுகளை முடிக்க தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். இதனால், மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் கோடை விடுமுறை கிடைக்கும். SHARE IT
News March 19, 2026
இன்னும் அமித்ஷா நேரம் ஒதுக்கல: EPS

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை இதுவரை எட்டப்படாத நிலையில் EPS டெல்லி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லிக்கு வந்ததன் நோக்கத்தை நாளை கூறுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 3 மாதங்களில் 3-வது முறையாக EPS டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


