News August 21, 2024
வாழை: மாரி செல்வராஜை பாராட்டிய விக்னேஷ் சிவன்

வாழை திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை கண்ட திரையுலக பிரபலங்கள், அப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜை மனந்திறந்து பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ளார். வாழையை திரையில் பார்த்து மெய் சிலிர்த்ததாகக் கூறிய அவர், மாரி செல்வராஜ் & அவரது படைப்புகள் மீதான மரியாதை 1,000 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Similar News
News March 16, 2026
IPL 2026: கேப்டன் ஆனார் அபிஷேக் சர்மா!

SRH அணியின் புதிய கேப்டனாக அபிஷேக் சர்மா பொறுப்பேற்க உள்ளார். பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா இடைக்கால கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. T20 WC-ஐ தவறவிட்ட கம்மின்ஸ் முழுமையாக குணமடைய இன்னும் 2 முதல் 3 வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
News March 16, 2026
தவெகவினரால் மன உளைச்சல்: ஜூலி

விஜய் கூறிய குட்டிக் கதை குறித்து கருத்து தெரிவித்த ஜூலியை SM-ல் தவெகவினர் தொடர்ச்சியாக திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தவெக நிர்வாகி உள்பட 8 பேர் மீது ஜூலி புகாரளித்துள்ளார். அதில், தனக்கு கிட்னி மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதாக தவெகவினர் வீடியோ வெளியிட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
News March 16, 2026
NDA-தவெக கூட்டணி? காத்திருக்கும் பாஜக

NDA-தவெக இடையே பேச்சுவார்த்தை நடக்கவில்லை என இருதரப்புமே அதிகாரப்பூர்வமாக மறுத்துவிட்டனர். ஆனாலும், கூட்டணிக்கு விஜய் வந்தால் வெற்றி உறுதி என கருதும் பாஜக, தொடர் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குவதால், அதற்குள் எப்படியாவது விஜய்யை தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என பாஜக காய் நகர்த்துகிறதாம்.


