News August 21, 2024
மின் கணக்கீட்டில் புதிய மாற்றம்

வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதனை ஒரே மின் இணைப்பாக மாற்றி, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யும் புதிய நடைமுறையை மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது. வீட்டு இணைப்பு ஒவ்வொரு பில் கணக்கீட்டிலும், 100 யூனிட் இலவசமாக கிடைக்கிறது. இந்நிலையில், வருவாயை பெருக்கும் நோக்கில், இரு மின் இணைப்புகளை ஒன்றாக இணைத்து, 100 யூனிட் கழித்து, மற்ற யூனிட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
Similar News
News August 16, 2025
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

இந்த ஆண்டு தீபாவளி வரும் அக்.20-ம் தேதி திங்கள்கிழமை வர உள்ளது. ஆகவே, முந்தைய வாரத்தின் சனி, ஞாயிறு என 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அந்த வகையில், அக்.17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் திங்கள் காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதால், சொந்த ஊர் செல்வோர் பயன்படுத்தி கொள்ளவும். அக்.18-ம் தேதிக்கான புக்கிங் செவ்வாய், 19-ம் தேதிக்கு புதன், 20-ம் தேதிக்கு வியாழன் காலை 8 மணிக்கு தொடங்கும்.
News August 16, 2025
₹8,700 கோடி நஷ்ட ஈடு கேட்கும் மெலனியா டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிராக, தற்போதைய அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு எதிராக ஹண்டர் பைடன் அவதூறு பரப்பியதாக கூறி ₹8,700 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தான் டிரம்ப்பிற்கு மெலனியாவை அறிமுகப்படுத்தியதாக ஹண்டர் பேசியிருந்தார்.
News August 16, 2025
ராசி பலன்கள் (16.08.2025)

➤ மேஷம் – நலம் ➤ ரிஷபம் – நன்மை ➤ மிதுனம் – நற்செய்தி ➤ கடகம் – தடங்கல் ➤ சிம்மம் – ஆர்வம் ➤ கன்னி – சாந்தம் ➤ துலாம் – செலவு ➤ விருச்சிகம் – குழப்பம் ➤ தனுசு – வெற்றி ➤ மகரம் – விவேகம் ➤ கும்பம் – இரக்கம் ➤ மீனம் – இன்பம்.