News August 21, 2024
தஞ்சை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான De-Addiction Centre அலுவலகத்தில் 3 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தஞ்சை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
தஞ்சை: விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் கரும்பு அரவை நடைபெற்று வருகிறது. நடப்பு அரவைப்பருவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பரப்பிலிருந்து 1,45,000 மெ.டன்கள் அரவை செய்ய திட்டமிடப்பட்டு 4-ம் தேதி வரை 1,11,368 மெ.டன்கள் அரவை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆலை அரவை 12-ம் தேதி நிறைவு செய்ய உள்ளதால் ஆலைக்கு பதிவு செய்து, விவசாயிகள் கரும்புகளை விரைந்து அனுப்ப ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.6) இரவு 10 முதல் நாளை (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 6, 2026
பொதுமக்கள் விழிப்புணர்வு முகாம் – ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பதிவுத்துறையில் நடைமுறைப்படுத்தியுள்ள ஸ்டார் (STAR) 3.0 திட்டத்தின் மூலம் ஆவணங்கள் பதிவேற்றம் செய்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு முகாம் வரும் 7-ம் தேதி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய நில ஆவணங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.


