News August 21, 2024

இன்று நாடு முழுவதும் பந்த்

image

நாடு முழுவதும் இன்று “பாரத் பந்த்” நடைபெறவுள்ளது. பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு (அருந்ததியர்) வழங்கியது செல்லும் என SC தீர்ப்பளித்தது. இதற்கு எதிரான பந்த்-க்கு விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால், வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும், பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் என கூறப்படுகிறது.

Similar News

News March 6, 2026

BREAKING: கவர்னர் RN ரவி மாற்றம்!

image

தமிழக கவர்னராக இருந்த RN ரவி மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ஆளுநராக இருந்த <<19306734>>ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா<<>> செய்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

News March 6, 2026

PhonePe-ல் பயோமெட்ரிக் முறை

image

UPI பேமெண்ட்க்கு பயோமெட்ரிக் முறையை PhonePe அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை PIN மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில், இனி Fingerprint அல்லது Face recognition வைத்து பேமெண்ட் செய்யலாம். இந்த பயோமெட்ரிக் முறை ₹5000 வரை பரிவர்த்தனைக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. உங்களிடம் PhonePe செயலி இருந்தால் உள்ளே சென்று பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி பாருங்க.

News March 6, 2026

சஞ்சு சாதனை… ஆர்ச்சர் வேதனை!

image

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 WC அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்தார். அதில் 7 சிக்சர்களும் அடங்கும். இதன்மூலம் டி20 WC வரலாற்றில் அதிக சிக்சர்கள்(16) அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதேசமயம், டி20 WC நாக் அவுட் போட்டியில் 50+ ரன்களை வாரி வழங்கிய பவுலர் எனும் மோசமான சாதனையை இங்கிலாந்தின் ஆர்ச்சர் (61 ரன்கள்) படைத்துள்ளார்.

error: Content is protected !!