News August 21, 2024
சென்னையில் இன்று மின்தடை

சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அடையாறு, ஹஸ்தினாபுரம், மடிப்பாக்கம், ஷுலா நகர், அன்னை தெரேசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர், ராஜராஜேஸ்வரி நகர், அம்பத்தூர், அத்திப்பட்டு, சோத்து பெரும்பேடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 6, 2026
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமக தலைவர் மனு தாக்கல்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 05), அதிமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமகவுக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், பாமக சார்பில் போட்டியிட,பாமக தலைவர் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில், அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News March 6, 2026
வண்ண மீன் பிரியர்களுக்கு நற்செய்தி!

சென்னை கொளத்தூரில் வண்ண மீன் வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை குறித்த கட்டணமில்லா விழிப்புணர்வுப் பயிற்சி வரும் மார்ச் 07 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் விருப்பமுள்ளவர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News March 5, 2026
சென்னை: கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்!

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


