News August 21, 2024
காங்கிரஸ் தலைமைக்கு கார்த்தி சிதம்பரம் சவால்

முடிந்தால் தன் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என, காங்கிரஸ் தலைமைக்கு கார்த்தி சிதம்பரம் சவால் விடுத்துள்ளார். திமுக அரசின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அவரின் கருத்தால், சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் தலைமையிடம், தமிழக கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த கேள்விக்கு, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தாம் பேசியது எப்படி விரோதமாகும் என்றார்.
Similar News
News August 15, 2025
திமுகவின் வரலாறு இப்படிதான்: அண்ணாமலை சாடல்

குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பதே திமுக வரலாறு என அண்ணாமலை சாடியுள்ளார். நாகர்கோவில் திமுக நிர்வாகி ராஜன், கோயிலுக்கு ஒதுக்கிய ஒன்றரை கோடி நிதியை சுருட்டி விட்டதாகவும், இது குறித்து DVAC-ல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சமூக விரோதிகளை வளர்த்துவிடும் திமுகவிற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News August 15, 2025
INTERNET வந்து இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவு

3G, 4G, 5G எல்லாம் வந்தாச்சு… அடுத்து 6G எப்ப வரும்ணு காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், 1995-ல் இதே நாளில், இந்தியாவில் பொதுமக்களுக்காக இணைய சேவை அறிமுகமான போது, அதன் வேகம் 9.6 kbps மட்டுமே (விவரங்களுக்கு படத்தை பார்க்க). VSNL தான் ஆரம்பத்தில் சேவை வழங்கியது. அதன்பின் தனியார் நிறுவனங்கள் நுழைய, இன்று 70 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தினமும் இணையம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
News August 15, 2025
மழை வெளுத்து வாங்கப் போகுது.. கவனமா இருங்க!

இன்று இரவு 10 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஆக. 21-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நாளை வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க நண்பர்களே!